ஒரு நாளைக்கு
இரண்டு முறை
சரியான நேரம் காட்டுமாம்
நின்று போன கடிகாரம்!
அது எந்த நேரம்,
எந்த நிமிடம்,
எந்த நொடி
என்று அறிய
ஒவ்வொரு நொடியும்
உண்மை சொல்லும்
இன்னொரு கடிகாரம் தேவை!
உண்மையில்,
நேரம் என்பது என்ன?
ஒரு நாளைக்கு
இரண்டு முறை
சரியான நேரம் காட்டுமாம்
நின்று போன கடிகாரம்!
அது எந்த நேரம்,
எந்த நிமிடம்,
எந்த நொடி
என்று அறிய
ஒவ்வொரு நொடியும்
உண்மை சொல்லும்
இன்னொரு கடிகாரம் தேவை!
உண்மையில்,
நேரம் என்பது என்ன?
எனது என்று
நான் நினைப்பது எதுவும்
எனதில்லை,
கடந்து செல்லும்
இந்த மணித்துளிகள் உட்பட!
கட்டணமின்றி பயணிக்கின்றோம்,
சுற்றிச் சுற்றி ஒரே தடத்தில்.
சேருமிடம் தெரியாமலே
பல ஆயிரம் மைல்கள்
கடந்து விட்டோம்...
செல்லும் வேகம் குறைவதை
எவருமே அறிவதில்லை,
அறியா வண்ணம்
வேகம் குறைந்தாலும்,
இந்த பூமி நிற்கப்போவது இல்லை!
பயணிகள் மட்டும்
ஓரிடம் ஏறி,
ஓரிடம் இறங்குகின்றோம்...
பயணங்கள் முடிவதில்லை!
நேற்று இரவு கண்ட கனவில்,
உச்சி வெயிலில்
சொரி பிடித்து
கேட்பாரற்றுத் திரியும்
தெருநாய்களைக் கண்டு
இரக்கம் கொள்கிறோம்,
தனியாக மாட்டிக்கொண்ட
பூனைக்குட்டியை
அவை கடித்துக் குதறும் போது?
நாய்களிடம் மாட்டி
இறந்து போன
பூனைக்குட்டிகளைக் கண்டு
இரக்கம் கொள்கிறோம்,
சிறு குருவியைப்
பிடித்துப் பிய்த்து
அவை தின்னும் போது?
எளியவரைத்
துன்புறுத்தாது
அன்பு செய்தல் அறமாம்!
இரக்கம் காட்டுவதையும்
தண்டிப்பதையும்
கடவுள் பார்த்துக் கொள்வார்!
பரீட்சைக்காக நினைவேற்றிக் கொண்டவை
ஆண்டு முடிந்தவுடன்
சவுகரியமாக மறந்து போனதில் மகிழ்ச்சி,
என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்த
சிந்தனைகள் மட்டுமே
இன்று என் வழித்துணையாக!
இவ்வளவு வேகமாய் எங்கே போகிறோம்?
நின்று நிதானித்து
வாழ்க்கையை ரசித்த நாட்கள்
வெகு தொலைவில் ஓடி விடவில்லை!
இன்று என் கட்டை விரலும் ஓடுகின்றது
கைப்பேசி தொடுதிரையின் மேல்!
குட்டியைச்
சுமந்து நிற்கும்
கங்காரு,
மின் விசிறியைச் சுமந்து
நிற்கும் மரம்!
இடம்: சென்னை தியாகராய நகர் G.N செட்டி சாலை